நாவலை படமாக்கும் ஆர்வம் உள்ள வெற்றிமாறன் 'விசாரணை' படத்தை'லாக் அப்' என்ற நாவலைத் தழுவி படமாக எடுத்தார்.‘அசுரன்’ திரைப்படமும் ‘வெக்கை’ என்ற நாவலைத் தழுவி தயாரான நிலையில், அவரது அடுத்த படம் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் எழுதிய'பட்டாம்பூச்சி விற்பவன்' என்ற கவிதைத்தொகுப்பின் அடிப்படையில் உருவாக இருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.
நா.முத்துக்குமாரை நினைவூட்டவிருக்கும் வெற்றிமாறன்! - actor soori
வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படமும் ‘வெக்கை’ என்ற நாவலை தழுவி தயாரான நிலையில் அவருடைய அடுத்த படம் நா.முத்துக்குமார் எழுதிய 'பட்டாம்பூச்சி விற்பவன்' என்ற கவிதைத் தொகுப்பை தழுவி தயாராகிறது.
vetrimaran upcoming movie
ஒரு வயதான மனிதர் இறந்தவுடன் அவரது இறுதிச்சடங்கிற்கு முன் நடக்கும் சம்பவங்கள் தான், இந்தப் படத்தின் கதை. எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.