தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காவலராக சூரி- விடுதலை பட போஸ்டர் வெளியீடு - cinema news

சென்னை: வெற்றிமாறன் - சூரி கூட்டணியில் உருவாகும் ‘விடுதலை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விடுதலை பட போஸ்டர்
விடுதலை பட போஸ்டர்

By

Published : Apr 22, 2021, 2:04 PM IST

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் சூரி, கதாநாயகனாக நடிக்கும் முதல் படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ’விடுதலை' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அத்துடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அதில் சூரி காவலர் உடை அணிந்து கம்பீரமாக நிற்கிறார்.

விடுதலை பட போஸ்டர்

’விடுதலை' படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் படக்குழு அங்கேயே குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தி, தங்கிப் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

“அசுரன்” படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் மீண்டும் ஒரு வித்தியாசமான கதைக்களத்துடன், சீட் நுனியில் ரசிகர்களை அமரவைக்கும் வகையில் படத்தை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இப்படம் மூலம் இயக்குநர் வெற்றிமாறன் முதன்முறையாக இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ABOUT THE AUTHOR

...view details