பெங்களூரு: பழம்பெரும் கன்னட நடிகர் சோமசேகர ராவ் எனும் சோமன்னா, வயது மூப்பின் காரணமாக நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
கன்னட திரையுலகில் முக்கிய நடிகரான சோமன்னா, தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். இவர் சுதந்திர போராட்ட வீரர் ஹரிகர் குண்டு ராவின் மகன் ஆவார். தனது உடன்பிறப்பை இழந்த சோமன்னா, மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.