தமிழ் சினிமாவின் முன்னணி நடன இயக்குநரான சிவசங்கர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடனமாடியுள்ளார். தேசிய விருது பெற்ற இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களிலும் நடனமாடியுள்ளார்.
இவர் 'திருடா திருடி' படத்தில் நடனம் அமைத்த 'மன்மத ராசா' பாடல் இன்றும் பலரது விருப்பமான பாடல் பட்டியலில் உள்ளது. இதுதவிர கண்ணா லட்டு தின்ன ஆசையா, பரதேசி, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் மாஸ்டர் சிவசங்கருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வந்தார்.