இந்தியாவின் பல்வேறு துறைகளில் சாதித்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2022ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இதில் இடம்பெற்றனர்.
பல தமிழ் திரைப்படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகிக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (மார்ச் 28) நடைபெற்ற விழாவில், சங்கரமாஞ்சி ஜானகிக்கு (சௌகார் ஜானகி) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தார். கலைத்துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்ததற்காக சௌகார் ஜானகிக்கு விருது வழங்கப்பட்டது.