தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பிரபல நடிகை ரேகாவின் பங்களாவுக்கு சீல் - காரணம் இதுதானா? - Latest cinema news

பிரபல நடிகை ரேகாவின் பங்களாவில் பணிபுரிந்த பாதுகாவலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Rekha
Rekha

By

Published : Jul 12, 2020, 12:33 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதிலும் குறிப்பாக மும்பை மாநகரில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. நடிகர், நடிகைகள் வீடுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுவருகிறது. நேற்று பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இச்சூழலில் பிரபல இந்தி டிகையான ரேகாவின் பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியிலுள்ள அவரது பங்களாவில் பணிபுரியும் பாதுகாவலருக்குக் கரோனா தொற்று இருப்பது கடந்த 2 நாள்களுக்கு முன்பு உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து மும்பை மாநகராட்சி நிர்வாகம் பங்களாவுக்கு சீல் வைத்து, அப்பகுதியைக் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details