பாலிவுட்டின் மூத்த நடிகரான யூசுப் உசைன் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 73.
ஹிந்தியில் வெளியான ‘தூம் 2’, ‘ராயீஸ்’, ‘ரோட் டூ சங்கம்’, ‘தபாங் 3’, ‘ஓ மை காட்’, ‘ஐ எம் சிங்’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர் பிரபல நடிகர் யூசுப் உசைன்.