தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பழம் பெரும் நடிகர் ஸ்ரீராம் லக்கு காலமானார்! - மராத்தி நடிகர் ஸ்ரீராம் லக்கு காலமானார்

வயது முதிர்வின் காரணமாக பழம்பெரும் நடிகர் ஸ்ரீராம் லக்கு காலமானார். 92 வயதான ஸ்ரீராம் லக்கு பூனேவிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

Veteran actor Shriram Lagoo passed away
Veteran actor Shriram Lagoo passed away

By

Published : Dec 18, 2019, 6:21 AM IST

ஸ்ரீராம் லக்கு இந்தி சினிமாவிலும், மராத்தி சினிமாவிலும் புகழ் பெற்ற நடிகராவார். திரையரங்க நாடகங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 20க்கும் மேற்பட்ட மராத்தி நாடகங்களை ஸ்ரீராம் லக்கு இயக்கியுள்ளார்.

இவர் இறப்புக்கு பிரகாஷ் ஜவடேக்கர், ரிஷி கபூர், மதூர் பந்தர்கர் போன்ற திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

'ஏக் தின் அச்சனக்', 'கரோன்டா', 'லவாரிஸ்' போன்ற திரைப்படங்களில் தனது நடிப்புத் திறமைக்காக பெரிதும் பேசப்பட்டவர் ஸ்ரீராம் லக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details