'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகியப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி புதிய படத்தில் இணைகின்றனர்.
ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். சிம்புவின் 47ஆவது படமான இதற்கு 'வெந்து தணிந்தது காடு' எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. 15 கிலோ எடையை இப்படத்திற்காக குறைத்து சிம்பு அசத்தி இருக்கிறார்.
கடந்த மாதம் திருநெல்வேலியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது.