பல தோல்வி படங்களுக்குப் பிறகு நடிகர் சிம்பு, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படமானது பல்வேறு தடைகளைத் தாண்டி, கடந்த 25ஆம் தேதி வெளியானது. மாநாடு திரைப்படமானது தீபாவளிக்கு வெளியிடுவதாகத் திட்டமிடப்பட்டு, பின்னர் படக்குழுவினரால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
மாநாடு திரைப்படம் குறித்து அனைத்து பத்திரிகைகளுமே பாசிட்டிவ் கமெண்டுகளை அள்ளித் தெளித்து வருகின்றன. வில்லனாக நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யாவின் அசரவைக்கும் நடிப்பு ரசிகர்களை ஆனந்த கூத்தாடச் செய்துள்ளது.
மேலும் இத்திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
தெலுங்கு ரீமேக்கில் மாநாடு?
இந்த நிலையில் படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று நன்றி தெரிவித்து ட்விட்டர் ஸ்பேஸில் உரையாடியானார்.