வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாநாடு'. சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்டநாள்களாக கிடைப்பில் போடப்பட்ட இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைப்பெற்று வருவதால், ரசிகர்கள் படத்தின் மீது பெரும் எதிர்பார்பில் உள்ளனர்.
'டெனெட்' எனக்கு புரியவில்லை 'மாநாடு' ட்ரெய்லருக்காக காத்திருங்கள் - வெங்கட் பிரபு விளக்கம்! - இயக்குநர் வெங்கட் பிரபு படங்கள்
சென்னை: சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் டீசரை 'டெனெட்' என்கிற ஹாலிவுட் படத்துடன் ஒப்பிட்டு பரவி வரும் கருத்துக்கு இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி 3ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் 'மாநாடு' படத்தின் டீசரை வெளியிட்டனர். இந்த டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. காலம் பின்நோக்கி ஓடுமாறு காட்சியமைக்கட்டிருந்த இந்த டீசர், கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'டெனெட்' - ஐ நியாபகப்படுத்துவதாக சமூகவலைதளவாசிகள் பலரும் கருத்துகளை பதிவிட ஆரம்பித்தனர்.
இந்த கருத்துகள் கடந்த இருநாட்களாக சமூகவலைதளங்களை ஆக்கிரமிக்கவே, அதற்கு இயக்குநர் வெங்கட்பிரபு தற்போது விளக்கமளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் 'மாநாடு' படத்தின் டீசரை 'டெனெட்' படத்துடன் ஒப்பிடுவது எங்களுக்கு கவுரவம் தான். துரதிர்ஷ்டவசமாக மாநாடுக்கும் டெனெட்டுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் எனக்கு 'டெனெட்' படம் புரியவே இல்லை. ட்ரெய்லருக்காக காத்திருங்கள். அப்போது வேறொரு படத்துடன் ஒப்பிடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.