வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' படத்தில், சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார்.
இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, திரை வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. இதற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.
தடைகள் தகர்ந்தது
இத்திரைப்படம் நவம்பர் 25ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சில தவிர்க்க இயலாத காரணங்களால் பட வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாகவும், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இன்று மாலை ட்விட்டரில் அறிவித்திருந்தார்.இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.