வைரஸ் குறித்து நடிகர் பிரேம்ஜி எழுப்பிய கேள்விக்கு அவரது சகோதரரும், இயக்குநருமான வெங்கட் பிரபு அவர் நோஸ்-கட் செய்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு தனது படங்களில் வரும் கதாபாத்திரங்களைப் போலவே நிஜத்திலும் மிகவும் ஜாலியான மனிதராகவே வலம் வருபவராக இருக்கிறார். எந்தவொரு விஷயமாக இருந்தாலும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் மிகவும் கேஷுவலாக அணுகும் இவர் மற்றும் இவரது குழுவினர் தமிழ் சினிமா ரசிகர்கள் பேவரிட் டீமாக இருக்கின்றனர்.
அந்த வகையில், வெங்கட் பிரபுவின் சகோதரரும், நடிகருமான பிரேம்ஜி தனது ட்விட்டரில் வைரஸ் குறித்த கேள்வி எழுப்பி பதிவிட்ட ட்விட்டுக்கு அவரை கிண்டலடித்து நோஸ்-கட் செய்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.
"ஒரு வேளை இந்த பூமியின் வைரஸாக மனிதர்களும், அதற்கு கரோனாதான் தடுப்பு மருந்தாக இருந்தாக எவ்வாறு இருக்கும்?" என்று பிரேம்ஜி தனது ட்விட்டரில் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, "உனக்கு தலைக்கு ஏறிவிட்டது என நினைக்கிறேன்" என்று நோஸ்-கட் செய்துள்ளார்.
வெங்கட் பிரபுவின் இந்தப் பதில், அவரது கோவா படத்தில் போதையில் இருக்கும் பிரேம்ஜி, நிலாவை பார்த்து கீழே வருமாறு அழைக்கும் காட்சி நினைவுக்கு வருவதாக உள்ளது.
ஷூட்டிங்கிலும் சரி, ஷூட்டிங் இல்லாத நேரத்திலும் சரி எப்போதும் ஜாலியான மனநிலையுடன் இருக்கும் இந்த கோலிவுட் சகோதரர்கள் பெரும்பாலான திரைவிழாக்கிளில் ஒன்றாகவே தோன்றுவார்கள். நண்பர்களுடன் அடிக்கடி பார்ட்டியில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர்கள் அவ்வப்போது இதுபோன்று குறும்புத்தனமாக பேசிக்கொள்வதும், கிண்டலடிப்பதுமாக இருந்து வருகிறார்கள்.
கரோனா பீதியால் திரைப்பட படப்படிப்புகள் வரும் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளங்களே கதி என இருக்கிறார்கள். இதில் பலர் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்வது பற்றி யோசனைகளையும், தகவல்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே மீதமுள்ள சிலரில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் இங்கும் ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: பிரேம்ஜி படத்தில் பாடகி வைக்கம் விஜயலட்சுமி