மங்காத்தா ஷூட்டிங்கின்போது படக்குழுவினருக்கு தல அஜித் பிரியாணி சமைச்சு கொடுத்த நாள் பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு நினைவுபடுத்தியுள்ளார்.
ஊரடங்கு காரணமாக பெரும்பாலனோர் வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்து வரும் வேளையில், பொழுதைப் போக்குவதற்காக பல்வேறு விவகாரங்களை செய்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதில் குறிப்பாக இன்றைய நாளில் நான் கண்டுபிடித்தது என்று கூறி, அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறிய, மறந்த பல செயல்களை பகிர்ந்து வருவது தற்போது ட்ரெண்டாகியுள்ளது.
இந்த லிஸ்டில் பல்வேறு விஷயங்களை பிரபலங்களும் பகிர்ந்து வரும் நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டரில், மங்காத்தா படப்பிடிப்பு நாட்களில் நான் செய்த ட்வீட் பதிவு. இன்று நான் கண்டுபிடித்தது என்று அந்த பழைய ட்வீட்டை இணைத்துள்ளார்.
அதில், மங்காத்தா பட இடைவெளி காட்சிகளை இன்று படமாக்கினோம். எனவே இந்தக் காட்சியை பார்க்கும்போது, இதேநாளில் தல அஜித் எங்கள் அனைவருக்கும் பிரியாணி சமைத்துக் கொடுத்தார் என்பதை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று 2010ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி பதிவிட்டிருந்த ட்வீட் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வருபவர்களுக்கு ட்ரீட் தரும் விதத்தில், தல அஜித்தின் சூப்பர் ஹிட் படமான மங்காத்தா, தொலைக்காட்சியில் இன்று (மார்ச் 30) மதியம் ஒளிபரப்பாகியுள்ளது. ரசிகர்களுக்கு விடுமுறைக் கொண்டாட்டமாக அமைந்திருக்கும் இந்தப் படத்தை, பலரும் பார்த்து ரசித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வந்த நிலையில், படம் குறித்து தனது நினைவளைகளை கண்டுபிடித்து பகிர்ந்துள்ளார் வெங்கட் பிரபு.
சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி வந்த வெங்கட் பிரபு, கரோனா வைரஸ் தொற்று காரணாக தற்போது படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருப்பதால் மற்ற பிரபலங்களைப் போல் வீட்டில் இருந்தவாறு சமூக வலைத்தளங்களே கதியென இருக்கிறார்.
தற்போது ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் கடை மற்றும் திறக்கப்பட்டுள்ள நிலையில், தனது பழைய ட்வீட்டை தூசு தட்டி தல செய்துகொடுத்த பரியாணி பற்றி குறிப்பிட்டு, ஏராளமானோர் ஃபேவரிட் டிஸ்ஸாகவும், தற்போது மிஸ் செய்து வரும் டிஷ்ஸாகவும் இருக்கும் பிரியாணி பற்றி நினைவுக்கூர்ந்துள்ளார் வெங்கட் பிரபு.