வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள, 'மாநாடு' படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, பாரதிராஜா, உதயா, பிரேம்ஜி என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. ஆனால் திடீரென மாநாடு படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நிறுத்திவிட்டதாக வதந்தி பரவியது.