தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் மே 1ஆம் தேதி தனது 50ஆவது பிறந்தாளை கொண்டாடவுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், அர்ஜூன், த்ரிஷா, ராய் லட்சுமி, பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியானப் படம் 'மங்காத்தா'. அஜித்தின் 50ஆவது படமான இந்தபடத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து தயாநிதி அழகிரி தயாரித்திருந்தார்.
சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் நெகட்டிவ் ரோலில் மாஸ் காட்டிய விநாயக் மகாதேவன் (அஜித்) ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இந்நிலையில், இப்படத்தை மறுவெளியீடு செய்ய வேணடும் என தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கு வெங்கட் பிரபு ட்விட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இது தொடர்பாக வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "தயாநிதி அழகரி சார் வருகின்ற மே 1ஆம் தேதி தல அஜித்தோட 50ஆவது பிறந்தநாள். உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி ஏப்ரல் 30ஆம் தேதி 'மங்காத்தா' படத்தை மறுவெளியீடு செய்தால் ரசிகர்களாகிய நாங்கள் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டு இருப்போம். பார்த்துச் செய்யுங்கள்" என பதிவிட்டு, 'மங்காத்தா' படத்தை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம், தயாநிதி அழகிரி ஆகியோரின் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்துள்ளார்.
வெங்கட் பிரபுவின் இந்த பதிவையடுத்து தல ரசிகர்கள் பலரும் தயாநிதி அழகிரிக்கு வேண்டுகோள் விடுக்கத் தொடங்கியுள்ளனர். அஜித் நடிப்பில் வெளியான 'பில்லா' திரைப்படம் அண்மையில் திரையரங்கில் மறு வெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:போடுறா வெடிய.. போனிகபூர் வெளியிட்ட 'வலிமை'யான அப்டேட்...!