தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

கையில் துப்பாக்கியுடன் மாஸாக நிற்கும் சிம்பு - சிம்பு புது பட அப்டேட்

'வெந்து தணிந்தது காடு' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு
சிம்பு

By

Published : Dec 7, 2021, 4:25 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்புவின் படம் வெற்றிப் பெற்றுள்ளதால் அவரது ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.

இந்நிலையில் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளதாக சிம்பு தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

கையில் துப்பாக்கியுடன் மாஸாக நிற்கும் புகைப்படத்துடன் இந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'அச்சம் என்பது மடமையடா' படத்திற்குப் பிறகு மீண்டும் சிம்புவை வைத்து கெளதம் மேனன் இந்தப் படத்தை இயக்குகிறார். கயடு லோஹர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் மிக பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது. மேலும் வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் படம் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க :விக்கி கவுஷல் - கத்ரீனா திருமணம்: ராஜஸ்தானில் பரபரப்பு புகார்

ABOUT THE AUTHOR

...view details