சிம்பு - கெளதம் மேனன் மூன்றாவது முறையாகக் கூட்டணி அமைத்துள்ள படம், 'வெந்து தணிந்தது காடு'. ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
சிம்புவின் 47ஆவது படமான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் சிம்பு அந்த படத்திற்காக சுமார் 15 கிலோ எடை குறைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்களை படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், சிம்புவுடன் நடிகை ராதிகா அமர்ந்திருப்பது போல் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் அவர் இப்படத்தில் சிம்புவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் மற்றொரு புகைப்படத்தில், அனைவரும் உணவு அருந்துவதுபோல் இடம்பெற்றுள்ள நிலையில், படத்தின் கலை இயக்குநர் ராஜீவன் ட்ரீட் கொடுத்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:300 மில்லியன்... சாய் பல்லவி பாடல் மூன்றாவது முறையாக சாதனை!