தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'எனை நோக்கி பாயும் தோட்டா' - ரிலீஸ் தேதி அறிவிப்பு - ENPT new release date announced

தனுஷ் - கௌதம் மேனன் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Enai Noki Paayum Thota

By

Published : Nov 2, 2019, 11:24 PM IST

#EnaiNokiPaayumThota தனுஷ் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. இப்படத்தில் மேகா ஆகாஷ், சசிகுமார், வேல ராம மூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ஜோமோன் டி ஜோன், மனோஜ் பரமாம்ஹ்சா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படவெளியீட்டில் இழுப்பறி நீடித்து வந்தது. பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் தேதி ஏற்கனவே செப்டம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டதோடு, படம் மீதான பிரச்னை முடிவுக்கு வராமல் இருந்ததை அடுத்து, நவம்பர் 15ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் பி.மதன் வெளியிடுவதாக இருந்தது.

தனுஷ், மேகா ஆகாஷ்

இதனிடையே, படம் வெளியாகுமா அல்லது மீண்டும் பிரச்னை ஏற்படுமா என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என படக்குழு மீண்டும் அறிவித்திருக்கிறது.

தற்போது வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் படத்தை 29ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதனால் தனுஷ் மற்றும் கௌதம் மேனன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி ரஜினிகாந்தின் '2.O' திரைப்படம் வெளியான நிலையில், இந்த ஆண்டு நவம்பர் 29ஆம் அவரது மருமகன் தனுஷின் படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...

சூப்பர் ஸ்டாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details