தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2021, 1:21 PM IST

ETV Bharat / sitara

'சத்தியமா சொல்லுறேன் டி'... வெளியானது முகேனின் வேலன் ட்ரெய்லர்

முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள வேலன் படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிம்பு வெளியிட்டார்.

வேலன்
வேலன்

பிக்பாஸ் மூன்றாவது சீசனின் டைட்டில் பட்டத்தை வென்றவர் முகேன் ராவ். இவர் தற்போது 'வேலன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

கவின் மூர்த்தி இயக்கியுள்ள இப்படத்தில் மீனாட்சி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வேலன் படத்தின் ட்ரெய்லரை இன்று (டிசம்பர் 22) நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் முகேன் ராவ், ''அப்பனோட பகை மட்டுமில்ல, வீரமும் பிள்ளைக்கு வந்து சேரும்' என்ற பேசிய வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அத்துடன் பிக்பாஸ் வீட்டில் முகேன் ராவ் பாடிய 'சத்தியமா சொல்லுறேன் டி' பாடல் படத்தில் இடம் பெற்றுள்ளது. 31 ஆம் தேதி வேலன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிங்க:'ஒருவழியா பிளான் பண்ணிட்டாங்க...' - ரிலீஸ் தேதியால் குஷியான ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details