தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'அரசு கொடுத்த அங்கீகாரம்' - நன்றி தெரிவித்த பாடகர் வேல்முருகன் - latest cinema news

சென்னை: இயல் இசை நாடக மன்றத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக தன்னை தேர்வுசெய்த அரசுக்குப் பாடகர் வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

By

Published : Dec 4, 2020, 2:03 PM IST

பிரபல நாட்டுப்புறப் பாடகரான வேல்முருகன், தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். தொடர்ந்து அதில் விளையாடிவந்த அவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு குறைவான வாக்குகள் பெற்றதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் பாடகர் வேல்முருகன் தற்போது தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராகத் தேர்வாகியுள்ளார். இதற்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பாடகர் வேல்முருகன் காணொலி ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “இயல், இசை, நாடக மன்றத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக என்னைத் தேர்வுசெய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி. நிச்சயமாக கலைத் துறைக்காகத் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன், நன்றி” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:'என்னைவிட எப்போதும் முன்னே நிற்கிறாய்' - விஷால் குறித்து ஆர்யா ட்வீட்!

ABOUT THE AUTHOR

...view details