விஷால் நடித்துள்ள 'வீரமே வாகை சூடும்' திரைப்படத்தின் டீசர் ஜனவரி 19ஆம் தேதியான இன்று வெளியானது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார்.
மேலும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகி பாபுவும், வில்லனாக மலையாள நடிகர் பாபுராஜும் நடித்துள்ளனர். படத்தின் இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது.