'எனிமி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது 31ஆவது படத்தில் நடித்துவருகிறார். புதுமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு 50 நாள்கள் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க இருக்கிறது.
இதில் டிம்பில் ஹயாத்தி, பாபுராஜ், யோகி பாபு, அகிலன், ரவீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். விஷால் ஃபிலிம் பேக்டரி இப்படத்தைத் தயாரிக்கிறது.