அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில், விஷால் நடிப்பில் 'வீரமே வாகை சூடும்' திரைப்படம் உருவாகியுள்ளது.
அதிகாரம் பலம் படைத்தவர்களை எதிர் கொள்ளும் ஒரு சாமானியனாக விஷால் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு உள்ளிட்டப் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விஷால் ஃபிலிம் பேக்டரி தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் வருகின்ற பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி இன்று (பிப்.4) விஷாலின் 'வீரமே வாகை சூடும்' திரைப்படமானது 2 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. விஷாலுக்கு திருப்புமுனையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இத்திரைப்பட வெளியீட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:'ராதே ஷ்யாம்' அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!