புகழ்பெற்ற மலையாள இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இம்ரான் ஹாஷ்மி, வேதிகா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘The Body'. இதில் ரிஷி கபூர், சோபிதா துலிபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்பேனிஷ் த்ரில்லர் படமான ‘El cuerpo’ (எல் குயர்போ) ஏற்படுத்திய தாக்கத்தில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. காவல் துறை அலுவலர் ஒருவர், பிணவறையிலிருந்து காணாமல்போன பிணத்தைத் தேடி அலைவதுதான் இந்தப் படத்தின் மையக் கதை.
டிசம்பரில் வெளியாகிறது ‘The Body’ - பிணத்தைத் தேடி அலையும் கதை! - The body trailer
இம்ரான் ஹாஷ்மி, வேதிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி பாடி’ (The Body) திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை அசுர் என்டர்டெயின்மென்ட், வயாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இம்ரான் ஹாஷ்மி கடைசியாக ’Bard Of Blood’ என்னும் நெட்ஃபிலிக்ஸ் சீரிஸில் நடித்திருந்தார். அவர் அடுத்ததாக அமிதாப் பச்சனுடன் ‘Chehre' (சேஹ்ரே) என்னும் த்ரில்லர் படத்தில் இணைந்துள்ளார். கார்த்தி, ஜோதிகா கூட்டணியில் ஜீத்து ஜோசப் ஒரு படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.