சென்னை: கரோனா வைரஸ் தொற்று வராமல் தவிர்க்க தவிர்க்காமல் ஸ்கிப்பிங் செய்யுமாறு நடிகை வேதிகா கூறியுள்ளார்.
கரோனா வைரஸ் தொற்று வராமல் இருப்பதற்குப் பல்வேறுவிதமாக யோசனைகளை அரசு முன்னெடுத்துள்ளது. பிரபலங்களும் தங்களது பங்குக்கு பல்வேறுவிதமான யோசனைகளைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வரிசையில், நடிகை வேதிகா தனக்கு ஏற்பட்ட யோசனையை அவரது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பசுமையான சூழ்நிலையில், வீட்டின் தோட்டம் அருகே வேகமாக ஸ்கிப்பிங் மேற்கொள்ளும் காணொலியை வெளியிட்டுள்ள அவர், "எனக்கு ஸ்கிப்பிங் செய்வது மிகவும் பிடிக்கும். அனைவரும் தவறாமல் வீட்டில் ஸ்கிப்பிங் மேற்கொள்ளுங்கள். ஏனென்றால் இதைச் செய்வதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை.
கரோனாவை தவிர்க்க தவிர்க்காமல் ஸ்கிப்பிங் பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது சுறுசுறுப்பைத் தருவதுடன், உடலின் வலிமையை அதிகரித்து சமநிலை ஏற்படச் செய்கிறது. எனவே மறக்காமல் ஸ்கிப்பிங் செய்து ஃபிட்டாக இருங்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும், இந்தக் காணொலியுடன், உங்களது ஸ்கிப்பிங் காணொலியையும் பகிருங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
உடல்நலத்தைப் பேணிக் காத்தால் நோய்கள் அண்டாது என்ற கருத்தை முன்வைத்து, பிரபலங்கள் பலரும் ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த நாள்களில் உடற்பயிற்சிக் கூடம் செல்ல வழியில்லாமல் வீட்டிலிருந்தே விதவிதமாக உடற்பயிற்சி மேற்கொண்டு காணொலியாக வெளியிட்டுவருகின்றனர்.
அத்துடன் உடற்பயிற்சி தொடர்பாக டிப்ஸ்களும் வழங்கிவருகின்றனர். இதனிடையே தற்போது வேதிகா ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் மகத்துவம் பற்றி விளக்கியுள்ளார்.