தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வசந்தபாலன் புது பட அப்டேட் வெளியீடு - இயக்குநர் வசந்தபாலன்

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய திரைப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

வசந்தபாலன்
வசந்தபாலன்

By

Published : Sep 8, 2021, 12:23 PM IST

Updated : Sep 8, 2021, 2:09 PM IST

தமிழ்த் திரையில் 'வெயில்', 'அங்காடி தெரு', 'அரவான்' உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர் வசந்தபாலன்.

இவர் இசையமைப்பாளர் ஜீ.வி. பிரகாஷை ஹீரோவாக வைத்து இயக்கிய 'ஜெயில்' திரைப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

இதனையடுத்து வசந்தபாலன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். துஷாரா விஜயன் நாயகியாகும் நடிக்கும் இதில் சிங்கம்புலி, பரணி, ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக்

இன்னும் பெயரிடாத இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் கூடிய பட தலைப்பு வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 10) வெளியாகும் எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அவரது சொந்தத் தயாரிப்பு நிறுவனமான அர்பன் பாய்ஸ் ஸ்டுடியோஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

Last Updated : Sep 8, 2021, 2:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details