தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மிரட்டும் கரோனா- திருமணத்தை தள்ளி வைத்த தவான் - கரோனா வைரஸ்

கரோனா வைரஸ் காரணமாக நடிகர் வருண் தவான் தனது திருமணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

மிரட்டும் கரோனா- திருமணத்தை தள்ளி வைத்த பிரபல நடிகர்!
மிரட்டும் கரோனா- திருமணத்தை தள்ளி வைத்த பிரபல நடிகர்!

By

Published : Mar 20, 2020, 11:31 AM IST

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. இதையொட்டி மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன. அந்த வகையில் மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை வரும் 31ஆம் தேதி வரை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா வைரஸ் காரணமாக நடிகர், நடிகைகள் சிலர் தங்களது பிரமாண்ட திருமண ஏற்பாடுகளையும் ஒத்திவைத்துள்ளனர். அந்த வகையில் ஹிந்தி நடிகர் வருண் தவானுக்கும், நடாஷா என்பவருக்கும் தாய்லாந்து ரிசார்ட்டில்,கோடையில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக, வருண் தனது திருமணத்தை நவம்பர் மாதம் ஜோத்பூரில் நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல் நடிகை ரிச்சா சத்தாவும் கரோனா வைரஸ் காரணமாக தனது திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தளபதி 65 அப்டேட் - துப்பாக்கி 2 படத்திற்கு தயாரான விஜய்?

ABOUT THE AUTHOR

...view details