நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படம் 'வர்மா'. தேசிய விருது பெற்ற இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கினார். 'வர்மா' படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருந்த நிலையில், இத்திரைப்படம் தங்களுக்கு முழுமையான திருப்தியளிக்கவில்லை என்றும்; இது 'அர்ஜூன் ரெட்டி' திரைப்படத்தின் ரீமேக் போன்று இல்லை என்றும் கூறி தயாரிப்பு நிறுவனம் படத்தை கைவிட்டது.
ஓடிடி தளத்தில் வெளியாகும் வர்மா திரைப்படம்! - director bala movies
சென்னை: இயக்குநர் பாலா இயக்கியுள்ள 'வர்மா' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மீண்டும் துருவை வைத்து இத்திரைப்படத்தை கிரிசாயா, 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் இயக்கி கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டார். இருப்பினும், பலரும் பாலாவின் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இயக்குநர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வரும் 6ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அர்ஜூன் ரெட்டியின் ரீமேக் திரைப்படமான 'வர்மா', பாலா வெர்ஷனில் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்ப்போம்.