தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இளம் பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்துக்கொன்ற சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் லாரி ஓட்டுநர்கள் இருவர், கிளீனர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. நாட்டையே உலுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், சட்டதிட்டங்களை கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.
இதனிடையே நடிகை வரலட்சுமி சரத்குமார் பெண் மருத்துவர் கொலை தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், 'இது மீண்டும் நடந்தேறிவிட்டது. இன்னும் எத்தனை உயிர்களை தியாகம் செய்ய வேண்டுமோ?
இதற்கு நாம் அனைவருமே பொறுப்பு.