நடிகர், நடிகைகளின் சமூக வலைதலப்பக்கங்கள் அடிக்கடி ஹேக்கர்களால், ஹேக் செய்யப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க பல முறை முயற்சி எடுத்தாலும், அது பலன் அளிக்காமல் தொடர்ந்து இதுபோன்ற அசம்பாவிதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள், ஹேக் செய்யப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “என்னுடைய ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் நேற்று (டிச.02) இரவிலிருந்து ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதனால் என்னால் அதை பயன்படுத்த முடியவில்லை. எனது குழுவுடன் சேர்ந்து நானும், அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளேன்.
அதுவரை எனது சமூக வலைதலப் பக்கங்களிலிருந்து ஒருசில நாள்களுக்கு செய்தி வந்தால், அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய கணக்குகள் மீட்கப்பட்டதும், அதுகுறித்து நானே தெரிவிக்கிறேன். மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சோனு சூட் பெயரில் புதிய துறை - சேவையை அங்கீகரித்த ஐஏஎஸ் அகாதமி