தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அப்போ ஜோதிகா... அடுத்து கீர்த்தி சுரேஷ்... இப்ப 'டேனி' வரலட்சுமி - வரலட்சுமி சரத்குமாரின் டேனி

சென்னை: வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'டேனி' திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாக உள்ளது.

வரலட்சுமி சரத்குமார்
வரலட்சுமி சரத்குமார்

By

Published : Jun 25, 2020, 2:08 AM IST

கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இதனால் வெளியீட்டிற்குத் தயாரான படங்களும் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.

சில தயாரிப்பாளர்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ள தங்களது படங்களை டிஜிட்டல் தளமான ஓடிடியில்(Over-the-top media service) வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் கடந்த மே 29ஆம் தேதியும், கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' திரைப்படம் ஜூன் 19ஆம் தேதியும் அமேசான் பிரைமில் வெளியானது. இதற்குத் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனங்களைத் தெரிவித்தது. ஆனால், தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு ஆதரவு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் பி.ஜி. முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத் குமார் நடித்துள்ள 'டேனி' திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறது. இந்தப்படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஜீ5 கைப்பற்றியுள்ளது. படம் வெளியாகும் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

இயக்குநர் சந்தான மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள 'டேனி' படத்தில், வரலட்சுமி சரத்குமார் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நாயும் நடித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details