’யாருடா மகேஷ்’, ’மாநகரம்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் சுந்தீப் கிஷன். இவர் தமிழ், தெலுங்கு என இரு மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சுந்தீப் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ. பி.எல்.’ படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
கமெண்ட் செய்த 'தெனாலி ராமகிருஷ்ணா'... ’ஷட் அப் ராஸ்கல்’ என்று பதிலளித்த 'சர்கார்' கோமளவள்ளி - தெனாலி ராமகிருஷ்ணன் பிஏ.பிஎல்
நீங்க எப்பவும் பார்க்க டான் மாதிரி இருக்கிறிங்களே என்று கேள்வியெழுப்பிய நடிகருக்கு வரலட்சுமி சரத்குமார் தனது பாணியில் பதிலளித்துள்ளார்.
காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இதனை நாகேஷ்வர் ரெட்டி இயக்கியுள்ளார். இதில் சுந்தீப், ஹன்சிகா, வரலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் கார்த்திக் இசையமைக்கும் இப்படமானது நவம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் போஸ்டரை வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து சுந்தீப் கிஷன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”மதிய வணக்கம் வரு சரத் மேடம் நீங்கள் எப்போதும் பார்க்க பெரிய டான் மாதிரி இருக்கிங்க அது எப்படி?” என்று கேள்வியெழுப்பினார். அதற்கு வரலட்சுமி ஹா...ஹா...ஷட் அப் ராஸ்கல் என ஜாலியாகப் பதிலளித்துள்ளார்.