தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'இந்த ஆண்டு மோசமாகிக் கொண்டே போகிறது' - வரலட்சுமி சரத்குமார்

சென்னை: கேரளாவில் நிகழ்ந்த விமான விபத்து குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Actress Varalakshmi Sarathkumar
Actress Varalakshmi Sarathkumar

By

Published : Aug 9, 2020, 6:46 PM IST

"வந்தே பாரத்" திட்டத்தின் மூலம் துபாயில் இருந்த இந்தியர்களை தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 7) இரவு 8.30 மணிக்கு கேரள மாநிலம், கோழிக்கோடு விமான நிலையத்தில் தரை இறங்கும்போது, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஒரு குழந்தை உள்பட 20 பேர் உயிரிழந்திருப்பதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த விபத்து குறித்து பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி தனது இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார் ட்வீட்

வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த ஆண்டு மோசமாகிக்கொண்டே செல்கிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து. விமானப் பணியாளர்கள் மற்றும் பயணிகளின் குடும்பங்களுக்கு பிரார்த்தனைகள்... அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வலிமை கிடைக்கட்டும். கடவுள் அவர்களுடன் இருக்கட்டும்" என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியளித்த ஜோதிகா

ABOUT THE AUTHOR

...view details