தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நேரில் சென்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவி செய்த வரலட்சுமி! - Corona precaution

நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது தாயாருடன் இணைந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரொட்டி பாக்கெட்டுகள் கொடுத்து உதவி செய்துள்ளார்.

வரலட்சுமி
வரலட்சுமி

By

Published : Jun 5, 2020, 7:55 PM IST

ஊரடங்கு உத்தரவால் பிற மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரயிலில் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடிகை வரலட்சுமி, தனது அம்மாவுடன் இணைந்து உதவி செய்துள்ளார். ஆம்..பிற ஊர்களில் இருந்து வரும் ரயில்கள் சென்னையில் சுமார் 30 நிமிடம் நிறுத்தப்படுகிறது. அப்போது 20 பெட்டிகளில் தலா ஒரு பெட்டிக்கு 80 பேர் இருப்பவர்களுக்கு ரொட்டி பாக்கெட்டுகளை வரலட்சுமி நேரில் சென்று கொடுத்துள்ளார்.

புலம்பெயர்ந்து தொழிலாளர்களுக்கு உணவுகளை வழங்கும் வரலட்சுமி...

மாஸ்க், கையில் கையுறை அணிந்தவாறு வரலட்சுமி, அம்மாவுடன் இணைந்து ரயில் பெட்டி அருகே அவசர அவசரமாக வேலை செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

ABOUT THE AUTHOR

...view details