’துருவங்கள் பதினாறு’ படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண்விஜய் ‘மாஃபியா’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிரசன்னா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
'நாம் இருவரும் நமது குடும்பத்தை பெருமைப்படுத்துவோம்' - நடிகை வனிதா! - வனிதா பிக்பாஸ்
நாம் இருவரும், நமது குடும்பத்தை பெருமைப்படுத்துவோம் என நடிகை வனிதா, அருண் விஜய்யின் பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் அருண்விஜய் தனது 30ஆவது படமான 'சினம்' படத்தில் நடிக்கிறார். இதில் அருண் விஜய் 'பாரி வெங்கட்' என்னும் கதாபாத்திரத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு சினம் படக்குழு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் மணிரத்னத்தை வைத்து வெளியிட்டது.
நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய அருண் விஜய்க்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகையும் அருண் விஜய்யின் சகோதரியுமான வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் அருண் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ' ஒரே வாழ்க்கை, ஒரே குடும்பம், ஒரே ரத்தம் நீயும் நானும். தனிப்பட்ட பயணித்தில் இருக்கலாம். ஆனால், இருவரும் இணைந்து பயணத்தைத் தொடங்கினோம். நாம் கண்டிப்பாக நம் குடும்பத்தை பெருமைப் படுத்துவோம். ஒரே மாதிரி இருப்பதுவே, எங்களை வேறுபடுத்தி விட்டது. பிறந்தநாள் வாழ்த்துகள், உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ ஐ லவ் யூ' என்று பதிவிட்டுள்ளார்.