தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பீட்டர் பாலை பிரிந்தேனா?- வனிதா விஜயகுமார் விளக்கம்! - latest kollywood news

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு குறித்து சமூக வலைதளங்களில் விளக்கமளித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதா
வனிதா

By

Published : Oct 21, 2020, 10:10 AM IST

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஜூன் மாதம், பீட்டர் பால் என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இதையடுத்து அவர்கள் கரோனா ஊரடங்கு மத்தியில் கோவாவிற்கு சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து நடிகை வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் ஒரு வீட்டை உடைத்தேன் என்று நினைப்பவர்களுக்கு. பல ஆண்டுகளாக வீடு மற்றும் குடும்பம் இல்லாத ஒருவருடன் நான் ஒரு வீட்டை உருவாக்கினேன், அவர் வேதனையடைந்தார். நானும் அப்படித்தான் இருந்தேன். எதுவும் நம்மை உடைக்க முடியாது என்று நான் நம்பினேன்.

ஆனால் அவருக்கு உடலில் பாதிப்பு ஏற்பட்டது. அவரை இழந்து விடுவேனோ என்று பயம் தோன்றியது. நான் இப்போது ஒரு பெரிய சவாலை சந்தித்துள்ளேன். அதை சரிசெய்ய முயற்சி செய்து வருகிறேன்.

நான் தேடிய அன்பை இழந்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது. என் வாழ்க்கை முழுவதும் போராட்டம் நிறைந்தது. அதிலும் காதலில் தோற்பதும் மரத்துவிட்டது. இன்னும் வலிமையோடு வாழ எதிர்கொள்கிறேன். இது நடந்திருக்க கூடாது என நான், சொல்ல மாட்டேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. ஒருவர் மீது அன்பு மட்டுமே செலுத்தினேன்.

இதுவும் கடந்து போகும். என் கணவர் மீது நான் பழிபோட விரும்பவில்லை. இருப்பினும் இது நடந்து விட்டது. எனது குழந்தைகளை மனதில் வைத்து சரியான முடிவை எடுப்பேன். வேறு எதையும் தெளிவுப்படுத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. வாழ்க்கை இன்னும் தொடர வேண்டும். இனி எதுவும் என்னை உடைக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பிரபாஸின் 'ராதே ஷ்யாம்' படத்திற்கு இசையமைக்கும் ஜஸ்டின் பிரபாகரன்

ABOUT THE AUTHOR

...view details