தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வெளியேறிய வனிதா... பிரபல சேனலில் இருந்து விலகி மற்றொரு சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்பு! - vanitha movies

நடிகை வனிதா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கன்னி தீவு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார்.

வனிதா
வனிதா

By

Published : Aug 28, 2021, 1:54 PM IST

Updated : Aug 28, 2021, 2:46 PM IST

நடிகை வனிதா விஜயகுமார் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3இல் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பிற்குப் பிறகு விஜய் டிவியில் குக் வித் கோமாளி, பிக்பாஸ் ஜோடிகள் ஆகிய நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இவருக்கும், நடுவர் ரம்யா கிருஷ்ணனுக்கும் இடையே போட்டி தொடர்பாகத் தகராறு ஏற்பட்டது. இதனால் வனிதா, அந்நிகழ்ச்சியிலிருந்து மட்டுமின்றி விஜய் டிவியிலிருந்தும் விலகினார்.

இந்நிலையில் இவர் தற்போது, பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கன்னி தீவு நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்துகொண்டுள்ளார். நகைச்சுவை நிகழ்ச்சியான இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் ஷகிலா, ரோபோ சங்கர், ஜாங்கிரி மதுமிதா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பவர் ஸ்டாருடன் வனிதா விஜயகுமார் செல்ஃபி

Last Updated : Aug 28, 2021, 2:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details