தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தஞ்சாவூர் மக்களிடம் மன்னிப்பு கேட்ட வனிதா விஜயகுமார்! - Latest cinema news

நடிகை வனிதா விஜயகுமார் தஞ்சாவூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வனிதா
வனிதா

By

Published : Jul 24, 2020, 5:33 PM IST

வனிதா - பீட்டர் பால் திருமண விவகாரத்தில் அனைவரும் தற்போது கருத்து கூறி வருகின்றனர். இதற்கிடையில் வனிதா விஜயகுமார் சமீபத்தில் பேட்டி ஒன்றில், "தஞ்சாவூரில் இரண்டு திருமணங்கள் செய்துகொள்கிறார்கள். என் அப்பாகூட தஞ்சாவூர்காரர்தான் அதனால்தான் இரண்டு திருமணம் செய்துள்ளார்" என்று தெரிவித்தார். இவரின் பேச்சு தஞ்சாவூர் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதற்கு மன்னிப்பு கேட்டு நடிகை வனிதா விஜயகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "என் அப்பாவும், அம்மாவும் தஞ்சாவூர்காரர்கள் என்பதை பெருமையாக கூறினேன். நான் தவறாக பேசியிருந்தாலோ அல்லது செய்திருந்தாலோ அதற்கு மன்னிப்பு கேட்க தயங்க மாட்டேன். நான் கூறியது தவறாக பார்க்கப்பட்டது.

என் கோபத்தையும், குரலையும் தவறாக எண்ணுகிறீர்கள். நான் தற்செயலாக கூறியது தற்போது வேறு மாதிரியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. என்னை மன்னித்துவிடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details