சமீபத்தில் பல சர்ச்சைகளுக்கிடையே நடிகை வனிதா சிக்கிக்கொண்டுள்ளது அனைவரும் அறிந்ததே. லட்சுமி ராமகிருஷ்ணன், சூர்யா தேவி, கஸ்தூரி, இயக்குநர் ரவீந்திரன் என பலரும் வனிதாவுக்கு எதிராக பல கருத்துகளைக் கூறிவருகின்றனர்.
அவர்களுக்குப் போட்டியாக வனிதாவும் பல கருத்துகளைத் தெரிவித்திருந்தார். சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி இருவருக்கும் எதிராகப் புகார் அளித்திருந்தார். இந்த வேளையில் குடும்பத்துடன் தான் ஜாலியாக இருக்கும் தருணத்தை வனிதா பகிர்ந்துள்ளார். நேற்று இரவு கணவர் பீட்டர் பால், இரு மகள்களுடன் காரில் பிக்னிக் சென்றிருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வனிதா பகிர்ந்திருந்தார்.