தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இயக்குநர் வசந்தபாலனுடன் இணைந்த வனிதா..! - வனிதா படங்கள்

இயக்குநர் வசந்தபாலன் இயக்கும் புதிய படத்தில் நடிகை வனிதா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வசந்தபாலன் படத்தில் வனிதா
வசந்தபாலன் படத்தில் வனிதா

By

Published : Aug 9, 2021, 8:49 AM IST

Updated : Aug 19, 2021, 9:28 PM IST

இயக்குநர் வசந்தபாலன் தற்போது அர்ஜுன் தாஸை நாயகனாக வைத்து படம் இயக்கிவருகிறார். இதில் நாயகியாக சார்பட்டா பரம்பரை பட பிரபலம் துஷாரா விஜயன் நடிக்க, ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

இன்னும் பெயரிடாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்நிலையில் இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை வனிதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இதில் நேர்கொண்ட பார்வை படம் மூலம் அறிமுகமான அர்ஜுன் சிதம்பரமும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:குழுவினருடன் கலகலப்பான 'டான்' சிவகார்த்திகேயன்: வெளியான புகைப்படங்கள்!

Last Updated : Aug 19, 2021, 9:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details