விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ எனும் தொடரின் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். இவரின் ஹோம்லியான லுக்கும், சிறந்த நடிப்பும் பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் கவர்ந்தது. இவருக்காகவே பெண்களோடு சேர்ந்து ஆண்களும் டிவி தொடர்களை பார்க்கத் தொடங்கினர். இதையடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரின் மூலம் மிகவும் பிரபலமானார் வாணி போஜன். இவர் சின்னதிரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.
இவ்வளவு அழகையும், நடிப்பையும் வைத்துக் கொண்டு ஏன் திரைப்படத்தில் நடிக்காமல் இருக்கிறார் என்று ரசிகர்கள் பல ஆண்டுகளாகக் கேள்விகளை எழுப்பி வந்தனர். இதற்கு இப்போது இனிப்பான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆம்.. வாணிபோஜனும் திரைப்படத்தில் நடிக்க வருகிறார். தமிழில் அல்ல.. தெலுங்கில். அர்ஜுன் ரெட்டி மூலம் அக்கட தேசத்து இளைஞர்களைக் கவர்ந்த விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளார். சமீர் இயக்கும் இப்படத்தில் தருண் பாஸ்கர் நாயகனாக நடிக்கிறார்.