தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#ohMykadavule நீங்களும் பாடலில் இடம்பெறலாம்’ ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த 'ஓ மை கடவுளே’ படக்குழு! - oh my kadavule movie first song

அசோக் செல்வன் நடித்துள்ள ‘ஓ மை கடவுளே’ படத்தில் வரும் முதல் பாடலில் ரசிகர்களும் இடம் பெறுவதற்கான வாய்ப்பை படக்குழு ஏற்படுத்தியுள்ளது.

ஓ மை கடவுளே’ படக்குழு

By

Published : Nov 6, 2019, 12:28 PM IST

ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள படம் ’ஓ மை கடவுளே’. இப்படத்தின் நடிகரான அசோக் செல்வன் இப்படத்தை தயாரித்துள்ளார்.

முதல் பாடல் குறித்து பேசிய நடிகர் அசோக் செல்வன்

மேலும், இந்த திரைப்படத்தில் ரித்திகா சிங், சாரா, வாணி போஜன் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

முதல் பாடல் குறித்து பேசிய நடிகை வாணி போஜன்

இந்நிலையில் இந்த பாடலில் ரசிகர்களும் இடம் பெறுவதற்காக படக்குழுவினர் ஓர் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். இப்பாடல் நட்பை மையமாக வைத்திருப்பதால் தங்களின் நண்பர்களோடு இருக்கும் புகைப்படங்கள், காணொலிகளை #ohMykadavule#omkfriendshipanthem என்ற ஹேஷ்டாக்கில் பதிவிட்டால் தங்களின் புகைப்படங்கள் இப்பாடலில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஓ...இது தான் சமந்தாவின் உண்மையான ஆட்டமா....!

ABOUT THE AUTHOR

...view details