தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வாணி போஜனின் 'மீக்கு மாத்ரமே செப்தா' ட்ரெய்லர் வெளியீடு! - வாணி போஜனின் புதிய படம்

வாணி போஜன் நடிப்பில் தெலுங்கில் உருவாகியுள்ள 'மீக்கு மாத்ரமே செப்தா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

mmc

By

Published : Oct 17, 2019, 2:48 PM IST

விஜய் தேவரகொண்டா நடிகராக மட்டுமல்லாது, தற்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு 'கிங் ஆஃப் தி ஹில்' எனப் பெயரிட்டு முதல் படமான 'மீக்கு மாத்ரமே செப்தா (MeekuMaathrameCheptha)' என்ற தலைப்பில் தயாரித்து வருகிறார்.இதன் பொருள் 'உங்களுக்கும் மட்டும் ஒன்றுசொல்கிறேன்' என்பதாகும். இப்படத்தை இயக்குநர் ஷாமீர் சுல்தான் இயக்குகிறார். மதன் குணாதேவா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தில் கதாநாயகிகளாக நடிகைகள் வாணி போஜன், அனசுயா பரத்வாஜ் ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தில் டீசர் வெளியானது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

இப்படத்தின் ஹீரோவாக இயக்குநர் தருண் நடிக்கிறார். இவர் விஜய் தேவரகொண்டாவை ஹீரோவாக வைத்து 'பெல்லி சூப்புலு' என்ற படத்தை இயக்கியவர் என்பது கூடுதல் தகவல்.

இதையும் வாசிங்க: 'மீக்கு மாத்ரமே செப்தா' - வாணி போஜன் பட டீசர் வெளியீடு!

ABOUT THE AUTHOR

...view details