சின்னத்திரை தொடர்களின் மூலம் தமிழ் மக்களிடையே நீங்கா இடம் பிடித்தவர் வாணிபோஜன். இவர் இப்போது சின்னத்திரை மட்டுமல்லாது வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் உருவாகி வரும், 'மீக்கு மாத்ரமே செப்தா' படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் அசோக் குமார், இறுதிச்சுற்று நாயகி ரித்திகா சிங் நடிப்பில் உருவாகி வரும் படம் ’ஓ மை கடவுளே (Oh My கடவுளே)' ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்து வரும், இப்படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி, வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியது.