நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில், கடந்த 2018ஆம் ஆண்டு 'செக்கச் சிவந்த வானம்' படம் வெளியானது.
அதற்குப் பிறகு 2019ஆம் ஆண்டு அவரின் ஒருபடம் கூட வெளியாகாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு மட்டும் தொடர்ச்சியாக ஐந்து படங்கள் வெளியாகின.
இதற்கிடையில் கடந்த 2017ஆம் ஆண்டு இவரை வைத்து 'அமராவதி' பட இயக்குநர் செல்வா, 'வணங்காமுடி' என்ற படத்தை இயக்கத் தொடங்கினார்.
காவல்துறை அலுவலராக நடிக்கும் அரவிந்த் சாமியுடன் சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா, தம்பி ராமையா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நிதி பிரச்னை காரணமாகத் தள்ளிப்போன இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
வணங்காமுடி டீசர் அறிவிப்பு இந்நிலையில் 'வணங்காமுடி' படத்தின் டீசர் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:மீண்டும் தள்ளிப்போகும் 'கேஜிஎஃப் 2' ரிலீஸ் தேதி?