தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிறையிலிருந்து வெளிவந்த அப்பா - மகன் சந்திக்கும் பிரச்னைகளுடன் வெளியான 'வானம் கொட்டட்டும்' ட்ரெய்லர் - வானம் கொட்டடும் பாடல்கள்

விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Vanam kottatum
Vanam kottatum

By

Published : Jan 23, 2020, 11:10 PM IST

தமிழில் வெளியான 'படைவீரன்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தனா. இவர் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் தற்போது 'வானம் கொட்டட்டும்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார்.

மடோனா செபாஸ்டியன், சரத்குமார், ராதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் மணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் மூலம் இதனை தயாரித்துள்ளார். இப்படத்தின் மூலம் பாடகர் சித்ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர், பாடல்கள் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. சிறையில் இருந்து வெளியே வரும் அப்பா சரத்குமாரால் மகன் விக்ரம் பிரபு சந்திக்கும் பிரச்னைகளை காட்சிப்படுத்தியுள்ளனர். விக்ரம் பிரபு - ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன் தங்கையாகவும், அவர்களது பெற்றோராக சரத்குமார் - ராதிகாவும் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமான ஃபேமிலி டிராமாவாக உருவாகியுள்ள 'வானம் கொட்டட்டும்' திரைப்படம் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் வாசிங்க: ஜாக்கிசானுடன் இணையும் மோகன்லால் - மறுப்பு தெரிவித்த இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details