Valimai Update: ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் 'வலிமை'(valimai).
அஜித்துக்கு ஜோடியாகப் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஓயாமல் அப்டேட் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு, வலிமை அடுத்தாண்டு பொங்கல் பண்டிகைக்குத் திரையரங்குகளில் வெளியாகும் என படத் தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.
வலிமை படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இன்னும் படம் வெளியாக ஒருமாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இதில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள், கிளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகின்றன.
இந்நிலையில் 'வலிமை' படத்தின் விசில் தீம் மியூசிக் இன்று (டிச.22) மாலை வெளியாகி அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
யுவனின் இந்த தீம் மியூசிக்குக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இது தொடர்பான அறிவிப்பை படத்தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க:'சத்தியமா சொல்லுறேன் டி'... வெளியானது முகேனின் வேலன் ட்ரெய்லர்