தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

10 ஆண்டு காதலியைக் கரம்பிடிக்கும் 'வலிமை' வில்லன் - latest kollywood news

ஹைதராபாத்: 'வலிமை' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் கார்த்திகேயாவுக்கு நேற்று (ஆகஸ்ட் 23) எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

வலிமை வில்லன்
வலிமை வில்லன்

By

Published : Aug 24, 2021, 10:16 AM IST

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'வலிமை'. இதில் அவருக்கு வில்லனாக தெலுங்கு பட நடிகர் கார்த்திகேயா நடித்துவருகிறார். இவர் லோஹிதா ரெட்டி என்பவரை நீண்ட காலமாகக் காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து, இரு வீட்டாரும் சம்மதித்த நிலையில் கார்த்திகேயா - லோஹிதாவின் நிச்சயதார்த்தம் நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக நிகழ்ச்சி எளிமையாக நடைபெற்றது.

இதில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். விரைவில் திருமணம் தேதி குறித்து அறிவிக்கப்படும் என மணமக்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கார்த்திகேயா ட்விட்டரில் கூறியதாவது, "என் தோழியாக இருந்தவர் தற்போது என் வாழ்க்கைத் துணையாக மாறிவிட்டார். 2010ஆம் ஆண்டு என்ஐடி (தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்) வாரங்கல்லில் லோஹிதாவை முதல்முறையாகச் சந்தித்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். கார்த்திகேயா - லோஹிதா ஜோடிக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:திரையரங்குகள் திறப்பு - ரிலீஸுக்கு தயாரான சிண்ட்ரெல்லா

ABOUT THE AUTHOR

...view details