தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இந்தியப் படமாக வெளியாகும் தல நடிக்கும் 'வலிமை' - வலிமை படத்தில் அஜித்

தல அஜித் நடிப்பில் முதல் பான் இந்தியா படமாக தமிழ் உள்பட நான்கு மொழிகளில் வலிமை திரைப்படம் வெளியாகவுள்ளது.

தல அஜித்
Thala Ajith

By

Published : Jul 29, 2020, 11:50 AM IST

சென்னை: இந்தியப் படமாக தல நடிக்கும் வலிமை படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக திரைப்படங்களில் பணிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து சில திரைப்படங்களின் படப்பிடிப்பும் அரசு விதித்த நெறிமுறைகளுடன் தொடங்கியுள்ளது.

இதற்கிடையே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பல படங்களில் அப்டேட்கள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது முக்கிய அறிவிப்பாக எச். வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படம் இந்தியிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் உலகத்தரம் வாய்ந்த ஆக்‌ஷன் காட்சிகளுடன் குடும்ப சென்டிமென்ட், சஸ்பென்ஸ், திரில் என அனைத்து அம்சங்களும் இருப்பதால் படத்தை இந்தியா முழுவதும் வெளியிட தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளாராம்.

இதையடுத்து இப்படம் தமிழ் தவிர பான் இந்தியா படமாக இந்தி, தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்படவுள்ளது. இதன் மூலம், அஜித் நடிக்கும் படம் முதல் முறையாக இந்தியில் வெளியாகவுள்ளது.

கரோனா காரணமாக வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: எளிய மக்களின் பாதுகாவலன் 'கர்ணன்'!

ABOUT THE AUTHOR

...view details